இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சுதந்திர கிண்ண தொடரின் ஐந்தாவது இர்பதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று(14) நடைபெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
177 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
மேலும், எதிர்வரும் 16ம் திகதி இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma