பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் கொண்டு வரப்படும்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் பாராளுமன்றில் முன்வைக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(14) ஒன்று கூடிய ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருக்கு எதிரான குறித்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

-Rishma