ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலியில் நடைபெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(14) இரவு இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானித்திருந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த டலஸ் அலஹப்பெரும;
“இம்முறை மே தினம் நடைபெறவுள்ளது வெசாக் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு பின்னால் என்பதால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. கொழும்பில் மே தின கூட்டத்தினை ஏற்பாடு செய்தால் கொழும்பிற்கு வெசாக் நிகழ்வுகளை பார்வையிட செல்லும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என கட்சித் தலைவர்கள் யோசனைகளை முன்வைத்திருந்தனர். வெசாக் போயா தினம் ஏப்ரல் 28,29 ஆம் திகதிகளில் கொண்டாடப்படுவதால் குறித்த நாட்களில் வெசாக் தோரணைகள் காட்சிக்காக வைக்கபட்டிருக்கும், வீதிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும் இவை மே தின நிகழ்வுக்கு பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புக்கள் அதிகம்” என தெரிவித்திருந்தார்.
-Rishma