பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் UNP சார்பில் 30க்கும் அதிகமான ஆதரவு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இதுவரையில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 30க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர்களான பாலித்த ரங்கே பண்டார மற்றும் லவசன்ன சேனாநாயக்க ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் மயன்ன திஸாநாயக்கவும் இதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கவிருப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

-g-rizmira