பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷர்மா இவர் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரரும் கேப்டனுமாகிய விராத் கோலியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்கள்.
நடிகை அனுஷ்கா சர்மா வாங்கியிருக்கும் பங்களாவின் மதிப்பும் தற்போது தங்கியிருக்கும் பங்களாவின் வாடகையும் பிரமிக்க வைத்திருக்கிறது. சர்மா. தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் முடிந்து விராத் ஓய்வில் இருக்கிறார். அதேபோல் தான் நடித்த, ‘பரி’ இந்தி பட ரிலீஸுக்கு பிறகு அனுஷ்காவும் ஓய்வில் இருக்கிறார்.
இந்த புதுதம்பதி, தங்களுக்காக மும்பையில் 36 கோடி ரூபாயில் பங்களா வாங்கியிருக்கின்றனர். உள் அலங்கார வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் வாடகை பங்களாவில் விராத், அனுஷ்கா தங்கி உள்ளனர். அதன் மாத வாடகை 15 லட்சம் ரூபாய், அட்வான்ஸ் தொகையாக மட்டும் ஒன்றரை கோடி தந்திருக் கின்றனர். இதுதான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.