எதிர்வரும் சனிக்கிழமை பாளி தீவில் இந்துக்களுக்கான புதுவருடப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது.
அதற்காக புதுவருடக் கொண்டாட்டத்தின் நிமித்தம் அந்நாட்டில் அனைத்து கைத்தொலைபேசிகளையும் தற்காலிகமாக தடை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த யோசனைக்கு கையடக்க தொலைபேசிக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் உடன்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாளி வாசிகளில் அநேகமானோர் கைப்பேசி பாவனைக்கு அடிமையாகி உள்ளதாகவும், ஆதலால் குறித்த தடையின் பிற்பாடு புதுவருட தினத்தில் சுதந்திரமாக அவர்களுக்கு குடும்பத்தாருடன் நேரத்தினை கழிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
–