ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன், இலங்கை தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை இன்று(16) விடுக்கவுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
37வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று(16) இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வு அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
குறித்த இந்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றவுள்ள மனித உரிமைகளுக்கான ஆணையாளர், கண்டியில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
####