அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடமாடும் சேவை ஒன்று நடவடிக்கைகள் இன்று(16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
சேதமடைந்த கட்டடங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், சமய ஸ்தானங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை மிக குறுகிய காலத்துக்குள் முன்னெடுக்கப்படும் எனவும் செயலகம் அறிவித்துள்ளது.