அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரத்தினை மாற்ற அரசு நடவடிக்கை..?

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன கொழும்பில் நேற்று(15) இடம்பெற்ற தொழில் மற்றும் வர்த்தக மகளிர் சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொணடு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

மேலும், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் வேலை நேர மாற்றம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், இலங்கையில் பெண்கள் பல துறைகளில் முன்னிலையில் உள்ள போதும், அது பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் மாற்றமடையவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

####