பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சி…

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்று நாளை(17) மட்டக்களப்பில் காலை 9.30ற்கு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த இந்தக் கருத்தரங்கு அறிவுபூர்வமான முதலீடு மற்றும் பலமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.