சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் குறித்த அமைச்சின் செயலாளரும் கைது செய்யப்பட வேண்டும் என மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கம் வலியுறுத்துவதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்தது போலியான நாடகச் செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-Rizmira