மொதரை – மாதம்பிடிய பிரதேச மஹவத்த தொடக்கம் போகஹவத்த வரையிலான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
குறித்த பிரதேச வீதியில் மேற்கொள்ளப்படும் நீர் குழாய் பராமரிப்பு காரணமாக நாளை(17) காலை 9 மணி தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 5 மணி வரை இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.