அரச ஆய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவினை அரசு வழங்கும்…

அரச ஆய்வாளர் திணைக்களமானது இந்நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பாரிய பங்களிப்பு ஒன்றினை வழங்குவதாகவும், குறித்த திணைக்களத்தின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக கொண்டு செல்ல தேவையான முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாகவும் நீதித்துறை அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரச ஆய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை நேற்று(16) பார்வையிடச் சென்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, அரச ஆய்வாளர் திணைக்களத்திற்கு கீழுள்ள தடயவியல் அறிவியல் பிரிவு, துப்பாக்கி மற்றும் அறிவியல் பிரிவு, வெடி திரவங்கள் மற்றும் துப்பாக்கி விசாரணைப் பிரிவு, போதைப் பொருள் துறை விசாரணைப் பிரிவு, கட்டிடக்கலை மற்றும் மரபணுப் பரிசோதனைப் பிரிவு ஆகியவற்றினை பார்வையிட்டு அமைச்சர் கலந்துரையாடி இருந்ததாகவும் நீதித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நீதித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை;

-Rishma