தியத்தலாவ கைக் குண்டு வெடிப்பு சம்பவம் – விசாரணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரம்…

தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் பேருந்தில் ஏற்பட்ட கைக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவக் குழுவின் அறிக்கையினை எதிர்வரும் வாரத்திற்குள் இராணுவத் தளபதியுடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண பிரதான தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ருக்மால் டயஸ் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி தியதலாவ, கஹகொல்ல பகுதியில் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் காயமடைந்திருந்ததோடு, குறித்த சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கடந்த 2 ஆம் திகதி இராணுவ உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.