பேலியகொட மேம்பலத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் புகையிரதத்தில் மோதியதிலேயே 45 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.