இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த இருபதுக்கு -20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று((18) இந்தியா அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்று சுதந்திர கிண்ணத்தினை இந்தியா அணி வசப்படுத்திக் கொண்டது.