நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நாளைமுதல் அடுத்த சில நாட்களுக்குள் படிப்படியாக குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு , மத்திய , சப்ரகமுவ , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்கரையோரப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.