பங்களதேஷ் இலங்கை மோதல் குறித்து ஹர்பஜன் கருத்து – விரலினையும் நீட்டினார்…

சுதந்திர கிண்ண இருபதுக்கு – 20முக்கோணத் தொடரில் கடந்த 16ம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பதற்ற நிலையினை தோற்றுவித்த பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச போட்டித் தடை விதிக்கப்பட வேண்டும் என இந்தியா அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“அது சுதந்திர கிண்ண தொடராகும். மறக்க வேண்டாம். தலைவர் அணியினை தலைமை தாங்க வேண்டும், நானும் இவ்வாறானவற்றுக்கு முகங்கோடுத்துள்ளேன்.

ஆனால், நீங்கள் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டிய நிகழ்வு இதுதான். நீங்கள் . நீங்கள் வெட்கப்படுவீர்கள். இதனால் பங்களாதேஷ் அணிக்கு ரசிகர்கள் குறைந்தனர்.

ஐசிசி செய்ய வேண்டியதை செய்யவில்லை. நடுவர் தீர்ப்புகளில் பிழை இருந்தது உண்மையே.. எனினும், இது ஒரு போட்டி.. ஆதலால் உங்களது வீரர்களை மைதானத்திலிருந்து அழைக்க முடியாது..”

குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதோடு மிகவும் கீழ்த்தரமாக வெற்றியினை கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.