பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த விளக்கமறியலில்…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்க சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆரச்சிக்கட்டு பிரதேச செயலாளரை தாக்கியமை குறித்த சம்பவத்துடன் பாரளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த நிபந்தனைக்கு அமைய குறித்த இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கையெழுத்து இடவேண்டிய நிலையில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கையெழுத்து இடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-riz