சசிகலாவின் கணவர் நடராசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் இன்று(20) இறந்தார் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7.00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிகிறது.