நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 152 பேரும், இன்று(20) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இந்த சத்தியப்பிரமாண வைபவம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில், நாரஹேன்பிட்டிய, அபயராம விஹாரையில் நடைபெறுமென, குறித்த கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 232 தொகுதிகளை வெற்றி கொண்டது. அதில், பெரும்பாலான சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்கான வெற்றியை, குறித்த் கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது.
மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, குறித்த சபைகளில் வெற்றியீட்டிய சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு, ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என, கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.