அப்பாவாகவுள்ளார் மைக்கல் கிளார்க்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் நடப்பு உலகக் கிண்ண மகுடத்தை தன் நாட்டிற்காக வென்று அசத்தியுள்ளார். இப்படி பல அறிய சாதனைகளுக்கு சொந்தகாரராக இருக்கும் கிளார்க்குக்கு விரைவில் குழந்தை தந்தையாகவுள்ளார்.

கிளார்க்கும், கைலியும் கடந்த 2012 ஆம் ஆண்டு இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது தமக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் கிளார்க் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலை அணித் தலைவர் கிளார்க் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.