22 ஆவது நாளாகவும் தொடர்கிறது கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு…

தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 22 ஆவது நாளாக இன்றும்(21) தொடர்கின்றது.

தமது பிரச்சினை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்ததை போன்று சாதகமான பதில் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.