மியான்மார் நாட்டு ஜனாதிபதி ஹெடின் க்யவ் (Htin Kyaw), தனது பதவியிலிருந்து விலகுவதாக அந்நாட்டுப் பிரதமர் ஆங் சாங் சூகி (Aung San Suu Kyi) இடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜனாதிபதி காரியாலய உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில், மியன்மார் ஜனாதிபதி ஓய்வினைக் கருத்தில் கொண்டு மார்ச் 21ம் திகதி பதவி விலக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.