பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று(21) மாலை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் பிரதமருக்குஎதிராக கையெழுத்து இட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-Rishma