இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற போட்டியின் போது எதிர்பாரா விதமாக அணிகளுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டமைக்கு காரணம் இலங்கை அணியின் வீரர் திஸர பெரேரா என பங்களாதேஷ் அணி வீரரான நூருல் ஹசன் பங்களாதேஷ் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘நான் மைதானத்தில் நுழைந்தேன், நாம் சென்றது மஹமதுல்லாஹ் ரியாத் இனை சந்திக்கவே. வந்து அவருக்கு தண்ணீர் வழங்கி நடுவரிடம் பேசினோம், நான் கேட்டது முதல் பந்து பவுன்சர் பந்து தானே என்று… அப்போது திஸர நம்மை நோக்கி அவ்விடத்திற்கு வந்தார். அவர் என்னிடம் ‘நீ யாரு இதையெல்லாம் கேட்க..’ என்று கேட்டார்,
அதன் பின்னர் அவர் என்னிடம் இவ்விடத்தினை விட்டும் செல்லுமாறு கட்டளையிட்டார். உனக்கு இங்கு பேச உரிமை இல்லை எனவும் தெரிவித்தார். அப்போது நான் கூறினேன், நான் இங்கு வந்தது உன்னை சந்திக்கவல்ல என நான் கூறினேன். அப்போது நான் அவருக்கு கூறினேன், இங்கு உங்களுடன் எனக்கு எவ்வித கொடுக்கல் வாங்களும் இல்லை என்று.. எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்க முடியாது.. அவ்விடத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு ஏற்ப நானும் நடந்து கொண்டேன். அதுதான் அங்கு நிகழ்ந்தது..’ என நூருல் ஹசன் தெரிவித்துள்ளார்.