பா.உறுப்பினர்கள் 55 பேரின் ஆதரவுடன் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் (2.30) பாராளுமன்றில் வைத்து சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கு, ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 51 பேரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 04 பேரினதும் கையொப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.