பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 04 பேர் கையொப்பம் இட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.பி.ஏகநாயக்க, நிஷாந்த முதுஹெட்டிகே, எஸ்.புஞ்சிநிலமே மற்றும் காதர் மஸ்தான் ஆகியோரே பிரதமருக்கு எதிராக இவ்வாறு கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.