ராபாடா முன்னிலையில் தலைகுனிந்தது ICC… – ஷாகிப் அணியின் “பாம்பு நடனம்” குறித்து ராபாடா அதிரடிக் கேள்வி…

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் முன்னிலையில், தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்திருந்த போதிலும், நேற்று குறித்த தடைகள் நீக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராபாடா சர்வதேச கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது;

” தன்னால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக விக்கெட் ஒன்றினை கைப்பற்றியமையினை கொண்டாடியதனை ICC இனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், பங்களாதேஷ் அணியின் “பாம்பு நடனம்” குறித்து ICC இனது நிலைப்பாடு என்ன” என்று சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்படுவதாவது,

“எனது நடத்தை பேய் மாதிரி எனில், தொலைக்காட்சிக்கு பொருந்தாது எனின், விசேடமாக போட்டியினை பார்வையிடும் பிள்ளைகளுக்கு பொருந்தவில்லை எனின், பங்களாதேஷ் அணியின் நடனம் குறித்து என்ன சொல்வது? அணியின் தலைவர் என்ற முறையில் ஷகீப் அல் ஹசன் இனது நடத்தையினை ஏற்கமுடியுமா? நான் கண்ணாடிகளை உடைத்தேனா? அவ்வாறு இல்லை என்றால் மைதானத்தில் மோதிக் கொண்டேனா?” என சர்வதேச கிரிக்கெட் சபையிடம் வினவியுள்ளது.