நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை…

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று(21) கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.