முத்துராஜவளை சரணாலயப் பகுதியில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு…

முத்துராஜவளை சரணாலயப் பகுதியில் நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இன்று(22) காலை குறித்த பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, பிரதேசத்தில் அரசியல் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.