பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாதிக்க தினம் குறிப்பு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சற்று முன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநயாகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று(22) மதியம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித் தலைவர்களிடையே விசேட கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma