பாலிவுட் பிரபல தம்பதிகளான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது அனுஷ்கா கர்ப்பமாகியுள்ளார் என்ற யூகத்திலேயே ஆகும்.
அண்மையில், கோஹ்லியின் ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பணிவிடையினை கருத்திற் கொண்டே இவ்வாறு யூகங்கள் எழுந்துள்ளன.
குறித்த பணிவிடையில்; “There’s a lot that’s happening right now. Fill you guys in real soon!” என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை வாசித்த ரசிகர்கள் அனுஷ்கா தாய்மையடைந்துள்ளதாக யூகித்து சமூக வலைதளங்களில் செய்திகளை பரிமாரிக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எது எவ்வாறாயினும், இது ஒரு யூகம் என்றும் உண்மை இல்லை என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

