Cambridge Analytica என்ற நிறுவனம், அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது, facebook நிறுவனத்திடம் இருந்து வாக்காளர்கள் பற்றிய தகவல்களைத் பெற்று, ட்ரம்ப் வெற்றி பெற உதவியதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில், facebook ஐ நீக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக வாட்ஸ் ஆப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற கருத்துகளால் facebook மீதான சந்தேகம் சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.