5 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது…

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொட்டஞ்சேனை பொலிஸார் நடத்திய சோதனையின் போது வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் நேற்று(22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுமார் 5 கோடி பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 3, ஆர்.ஏ. த மெல் மாவத்தையை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.