லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை நேற்று(23) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 09 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
####