ரணிலின் அகவை 69 இற்கு மத வழிபாட்டுத் தளங்களின் விசேட பூஜை…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(24) தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றது.

இதன்போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் துணிமணிகள் வழங்கும் நிகழ்வுகளும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவியருக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிய வருகின்றது.

கடுமையான அரசியல் நெருக்கடி நிலைமைகளின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க தனது 69ஆம் பிறந்த நாளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுப்பார் என அரசியல் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.