பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை விவாதிக்க கூடிய சீக்கிரமே தினம் குறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியே ஆலோசனை முன்வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, குறித்த விவாதம் விரைவில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது அறிவிப்பிற்கு இணங்க குறித்த கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர் விரைவாக குறித்த விவாதத்தினை எடுத்துக் கொள்ள கட்சி விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற பின் வரிசை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கையில், விவாதத்தினை விரைவாக விவாதிப்பத்தில் எமக்கு எவ்வித பயமும் இல்லை. ஆதலாலேயே விரைவு படுத்தினோம் என தெரிவித்துள்ளனர்.