இந்தியா அணித் தலைவர் கோஹ்லிக்கு மீண்டும் ஓய்வு…

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தொடங்கும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் வகையில், ஜூன் மாதம் நடக்கும் ஆப்கான் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி விலகி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரத்தை வழங்கியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஜூன் 14 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறும் இப்போட்டியில், இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி விளையாடப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி தொடங்கும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு- 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.