பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாக மார்டின் பதவியேற்பு…

பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாக மார்டின் விஸ்காரா இன்று(25) பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வில் அவர் கூறுகையில்; அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட உள்ளேன் என தெரிவித்துள்ளார்

பெருவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி அமைச்சராக இருந்த போது பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்கு அரசு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த முறைப்பாட்டை அடுத்து அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.