போதுமானளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கையிருப்பில்…

புத்தாண்டு காலப்பகுதியில் போதுமானளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கோட்டை மற்றும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் கையிருப்பில் இருப்பதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப்பொருட்களின் விலைகள் நிலையான மட்டத்தில் பேணப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடத்துடன் இவ்வருடத்தை ஒப்பிடுகையில் பல பொருட்களின் விலைகள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் சங்கத்;தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட உள்நாட்டு அரிசி சந்தைக்கு கிடைத்து வருகிறது. வவுனியாவிலிருந்தும் பெரும்தொகை சந்தைக்கு வர உள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு தொகை அரிசி சந்தைக்கு வந்துள்ளது.

குறித்த அரிசி வகைகள் சந்தைக்கு கிடைத்த பின்னர், புத்தாண்டு காலப்பகுதிக்கு முன்னதாக அரிசி விலை மேலும் குறைவடையும் என்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாண்டோ கூறியுள்ளார்.