ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் 44 போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனைப் படைத்து சர்வதேச அளவில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
19 வயதான இவர் 2015 ஆம் ஆண்டு தனது 16 வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான், 26 போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தற்போது சிம்பாப்வேயில் உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று(25) நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் 44 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் இடது கை வேகபந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.