நாளை ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்துடனான விசேட மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நாளை சனிக்கிழமை (11) கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினது தலைமையில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டின் போது பொதுத் தேர்தல் தொடர்பிலான ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

(riz)