ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று(29) சந்திக்க உள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று(29) முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் என்பன குறித்தும் ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.