நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

நாட்டின் மேற்கு வடமேற்கு , சப்ரகமுவ , தெற்கு , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் ,மன்னார் ,முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.