ரணிலுக்கு எதிரான மும்முனைத் திட்டம் குறித்து வாசுதேவ அம்பலம்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவி இலிருந்து கவிழ்க்க மும்முனைகளில் தீவிர முனைப்பு காட்டப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்;

“.. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் மூன்று முனைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் பெருந்தொகை பணத்தை வாரி இறைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சில தரப்பினர் பிரதமருக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக போலியாக பசாங்கு செய்து ரணிலுக்கு ஆதரவளிக்கவும் சிலர் இணங்கியுள்ளனர்..”