பிரதமர் மற்றும் கட்சி குறித்து செயற்குழுவினால் இரு தீர்மானங்கள்…

ஏப்ரல் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

மேலும், கட்சியின் புதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் இரு மாதங்களுக்குள் முன்னெடுக்க குறித்த செயற்குழு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma