வேட்புமனு வழங்காவிடின் அரசியலிலிருந்து ஒய்வு பெரும் துமிந்த??

தமக்கு வேட்புமனு வழங்கப்படாது போனால் வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல் வீட்டில் இருக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கலில் துமிந்த சில்வா உள்ளடக்கப்படவில்லை.

இதற்குப் பிரதான காரணமாக போதைவஸ்து உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துமிந்த சில்வா, தமக்கு வேட்புமனு வழங்கப்படாமை நியாயமற்ற செயல் என்று குறிப்பிட்டார்.

எனினும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லஷ்மன் பிரேமசந்திர கொலை மற்றும் வேலே சுதா என்ற போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டுக்கள் துமிந்த சில்வா மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)