வெசாக் போயா தினம் எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், தொழிலாளர் தினமானது இம்முறை மே 07ம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
உலகில் எந்தவொரு பெளத்த நாடும் மேற்குறித்த தீர்மானத்தினை எடுத்ததில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் கருத்துத் தெரிவித்த அதன் பிரதான தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தினை கொண்டாடும் உரிமையினைப் போன்றே தொழிலாளர் தினத்தினை கொண்டாடவும் உரிமை உண்டு என அவர் விளக்கமளித்திருந்த நிலையில் வெசாக் தினத்திற்கு உச்ச மதிப்பளித்து, தொழிலாளர் தினத்தினை பிற்போடாதிருக்க வேண்டும் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Rishma