நாடளாவிய ரீதியாக தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் 3 ஆயிரத்து 766 ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் நேற்று(29) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் 10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் இடமாற்றத்தின் மூன்றாவது கட்டமாக இது இடம்பெறுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.